தேர்தலுக்கு பிறகு…. திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது – எல்.முருகன் சவால்…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த தேர்தலுக்குப் பின்னர் திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் சவால் விட்டுள்ளார். மோடி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறார். ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார். ஸ்டாலினின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தேர்தலுக்கு பின் தமிழகத்தில் திமுக அரசியலிலேயே இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.