சென்னை அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்கள் செயல்படும் முறை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, தென்னிந்தியாவில் நாம் இந்த முறை அதிக பாராளுமன்ற வேட்பாளர்களைப் பெற இருக்கிறோம். இந்த முறை மட்டும் டெல்லியில் பாஜக 60% வாக்குகளை பெறும். பாஜக 3-வது முறை ஆட்சி அமைக்கும் என்பது காலத்தின் கட்டாயம். குஜராத், டெல்லி உட்பட அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் பாஜக வெற்றி பெறும். வருகின்ற ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பாஜகவின் வெற்றியை கொண்டாடுவதற்கு தயாராக இருங்கள். தாமரை படர்ந்திருக்கும் காட்சியை தேர்தல் முடிவுக்கு பிறகு பார்ப்பீர்கள். மேலும் அதற்குப் பிறகு வடக்கு தெற்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.