“தேசிய விவசாயிகள் தினம்”… இன்றாவது செவிசாய்க்குமா மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவதால் விவசாயிகளின் பிரச்சினைக்கு மத்திய அரசு இன்று செவிசாய்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான இன்று “தேசிய விவசாயிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கம், விவசாய பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 30 நாட்களாக டெல்லியில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு இன்றாவது காது கொடுத்து கேட்கும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

நமக்கு தினமும் உணவளிக்கும் விவசாயிகளை என்று போற்றிப் புகழும் தினம். விவசாயிகள் இல்லை என்றால் நாம் உணவு அருந்த முடியாது. நாம் வாழ்வதற்கு இன்றியமையாத உணவை அளிக்கும் உழவாளிகளை நாம், நம் உயிரை விட பெரிதாக போற்ற வேண்டும்.