தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் தேசிய மகளிர் ஆணையத்தில் குழந்தைகள் நல உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் தற்போது குஷ்பூ தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.

அவருடைய ராஜினாமாவை மத்திய பெண்கள் மற்றும் மேம்பாட்டு அமைச்சகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருக்கிறார். மேலும் ஒரு வருடமாக அவர் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் வகித்த நிலையில் தற்போது திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.