தேசிய அளவிலான சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக அணி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிராம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வத்திராயிருப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தேசிய கைப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவரை பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், விளையாட்டு வீரர்கள், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.