தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்… கொள்முதல் செய்யப்படுமா..? விவசாயிகள் கோரிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இருந்து விரைவில் கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமாகுடி, திருக்கடையூர், கிள்ளியூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அங்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை 5 நாட்களாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் பலத்த கனமழையால் நெல் பயிர்கள் சேதம் அடைந்ததால் மகசூலும் இல்லை. அதில் மிஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொண்டு சென்றால் அங்கே நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டால் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல சரியான லாரிகள் எதுவும் வரவில்லை என்று கூறுகிறார்கள்.

ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் தேங்கிக் கிடக்கிறது. கொள்முதல் செய்யப்படாததற்கான முக்கிய காரணம் லாரி தட்டுப்பாடு என்று கூறுகிறார்கள் கடன் வாங்கி நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *