பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜனவரி 11-ஆம் தேதி வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தெலுங்கு பதிப்பான வாரசுடு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், இது தொடர்பாக தில் ராஜூ பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தெலுங்கு ஹீரோக்கள் நடித்துள்ள வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹா போன்ற படங்களை முதலில் தியேட்டர்களில் பாருங்கள். இதன் காரணமாகத்தான் வாரசுடு படத்தை தள்ளி வைத்துள்ளோம். அதன் பிறகு நான் நல்ல கதையை தான் விரும்புகிறேன். மேலும் இனிவரும் காலங்களில் நடிகர் ரஜினி, கமல், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருக்கு ஏற்ற நல்ல கதைகள் கிடைத்தால் அவர்களின் படங்களை கட்டாயம் நான் தயாரிப்பேன் என்று கூறியுள்ளார்.