கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து மாவீரன் படத்திலும் சமீபத்தில் வெளியான நேசிப்பாயா படத்திலும் அதிதி சங்கர் நடித்திருப்பார்.

தற்போது அதிதி சங்கர் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குனரான விஜய கனகமெடலா என்பவர் இயக்கும் பைரவம் திரைப்படத்தில் தான் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் பைரவம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று பட குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசர் வீடியோவை காண