தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த நிலையில் இன்று விடுதலையானார். நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தெலுங்கு திரை உலக பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டங்களை தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதை. இதுதான் தெலுங்கானாவில் நடிகர் அல்லு அர்ஜுனின் கைதில் நடந்துள்ளது.

புஷ்பா 2 படம் பார்க்க வந்ததில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்திருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்தாலும் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையினரின் கடமை. ஒரு இடத்தில் கூட்டம் கூட தொடங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. ஆனால் அப்போது வேடிக்கை பார்த்துவிட்டு கூட்டம் கூடியதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று கூறி அவரை கைது செய்துள்ளனர். சென்னையிலும் வானூர்தி சாகசத்தையும் போது இதுதான் நடந்தது. கூட்டம் கூட ஆரம்பித்த உடன் தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் 5 உயிர்கள் பறிபோனது. தெலுங்கானா மாடலின்படி கைது நடவடிக்கை என்றால் தமிழகத்தில் அப்போ ஆட்சியாளர்களை கைது செய்யலாமா. மேலும் தெலுங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை தான் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.