“தெற்கிலிருந்து வருபவர்களை நாம் வரவேற்கிறோம்”…ஆனால்… குறைபட்டுக்கொண்ட சல்மான்கான்….!!!!!

காட்பாதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றதில் சல்மான்கான், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான். மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் வரவேற்பையும் வெற்றியையும் பெறுகிறது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சல்மான்கான் கூறியுள்ளதாவது, தெற்கிலிருந்து வருபவர்களை நாம் வரவேற்கிறோம், வாழ வைக்கிறோம். ஆனால் நம்மை தான் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி உங்களை கவனிக்கத்தான் நாங்கள் இருக்கிறோமே… சல்லு பாய் என்னுடைய திரைப்படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று உங்களை ஒப்பந்தம் செய்ததே அதனால் தானே என அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது சல்மான் கான் இத்திரைப்படத்தில் நான் ஒரு வரி வசனம் மட்டுமே தெலுங்கில் பேசியிருக்கின்றேன் மற்ற அனைத்தையும் ஹிந்தியில் தான் பேசி இருக்கின்றேன் என கூறியுள்ளார்.