வேற லெவல்… வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கலக்கும் அட்லீ… ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்…!!!

இயக்குனர் அட்லீ வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வரும் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் .

atlee-latest-hairstlye-cinemapettai

தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக  நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட்லீயா இது!’   ஆச்சரியமடைந்துள்ளனர்.