‘தெறி’ படப்பிடிப்பில் விஜய் மகள், மகனுடன் மொட்டை ராஜேந்திரன்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘தெறி’ படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யின் மகள், மகனுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது ‌.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி . இயக்குனர் அட்லி இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். மேலும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தெறி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யாவுடன் இணைந்து நடிகர் மொட்டை ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது‌ . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘தெறி’ படத்தின் ஒரு சிறிய காட்சியில் விஜய்யின் மகள் திவ்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *