தெரியாமல் பேசாதீங்க ஓபிஎஸ் …! ரூ.800,00,00,000 வாங்கினோம்… அமைச்சர் முக்கிய தகவல் ..!!

மத்திய அரசிடம் ரூ 800 கோடி வாங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுபராமணியன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசின் சார்பில் நானும், சுகாதாரத்துரையின் செயலாளரும் கொரோனா ரெகவரி பேக்கேஜ் என்கின்ற வகையில் 800 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று வந்திருக்கிறோம். மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து இந்த ஆண்டுக்கு கொரோனா ரெக்கவர் பேக்கேஜ் என்கின்ற வகையில் ஒரு 800 கோடி. இதையெல்லாம் எப்போது இந்த நிதிநிலை அறிக்கை வரும் என்றால், ரிவர்ஸ் எஸ்டிமேட் போடும் போது இந்த 800 கோடி அதில் சேரும்.

ரிவர்ஸ் எஸ்டிமேட் போடும் போதுதான்  புதிதாக 4900 பேர் செவிலியர்களை பணியில் அமர்த்துவதற்காக பணிகள் மேற்கொள்ளபட்டிருகிறது. இவர்களுக்கான சம்பளம் கூட இதில் போடப்படும். ரிவர்ஸ் எஸ்டிமேட்டில் போடப்படும் போதுதான் நிதிநிலை அறிக்கையில் இந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்கின்ற முழுமையாக தெரிய வரும்.

மருந்து வாங்குவதில் கொள்முதல் செய்வதற்கு செலவிடப்பட்டதில் குறை இல்லை, அந்த நிதி ஒதுக்கீட்டில் குறையில்லை, இப்படி எந்த  துறையிலும் குறைவில்லாத போது  எதுவுமே தெரிந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக 487 கோடி குறைவாக ஒதுக்கீயுள்ளர்கள் என்கின்ற வகையில் பத்தாண்டு காலம் நிதியமைச்சராக இருந்தவர் வெளியிடுவது என்பது எந்த வகையில் நியாயம்.

அதை சொல்லி அதற்காக எக்ஸ்ரே எடுப்பதை நிதி சுமையின் காரணமாக நிறுத்தி இருக்கிறார்கள் என்பதை ஒரு பொருந்தாத காரணத்தை சொல்வது என்பது சரியாக இருக்காது. அது மட்டுமல்ல இந்த துறையில் உங்கள் ஆட்சியில் செய்த அத்தனை குளறுபடிகளையும் சரி செய்து வருகிறோம். நீங்கள் 385 ரூபாய்க்கு வாங்கிய பி.பி.கிட் இப்பொழுது 139 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. நீங்கள் சாப்பாட்டுக்கு 550 செலவழித்து இருந்தீர்கள், இப்போது 350 ரூபாய் ஆகிவிட்டது.

ஹோட்டல் அகாம்டேஷன் 900ஆக இருந்தது. இப்போ 750 ரூபாய் ஆகிருச்சு. இந்த முககவசம் 85 காசுக்கு வாங்குவதை நீங்கள் 8.65 காசு என்று வாங்குனீர்கள். இந்த மாதிரி ஒவ்வொன்றிலும் கூடுதலாக நீங்கள் பணத்தை ஒதுக்கி நாங்கள் கூடுதலாக ஒதுக்கினோம், இப்போ குறைவா ஒதுக்கினோம் என்று சொன்னால் எந்த வகையில் நியாயம்.

நிதி அமைச்சராக இருந்தவர் இதில் எங்கேயாவது நிதி ஒதுக்கீட்டில் குறைவாக இருக்கின்றது என்று நேரடியாக வந்தால் உங்களுடன் நாங்கள் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு அரசு மருத்துவமனைகளின் மீது அவதூறு கிளம்புவதை, எதோ ஒன்றிரண்டு சமூக வலைதளங்களில் செய்தி வந்தது என்பதற்க்காகவே அதை எடுத்துக்கொண்டு பேசுவது என்பது ஒரு நல்ல அரசியலுக்கு அடையாளம் அல்ல, என்பதையும் அவருக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *