இங்கிலாந்தில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பிற நாடுகள் தடை செய்துள்ளன. இருந்தபோதிலும் இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து லண்டன் வந்த இரண்டு பேருக்கு கொரோனாவின் மற்றும் ஒரு புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புதிய கொரோனா வைரஸும் இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாக பரவும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டன் வருபவர்களுக்கும் கட்டாய தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.