தூய்மை பணியாளர்களுக்கு…. இரவில் ஒளிரும் சீருடைகள்…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும் போன்ற அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டது.

மேலும் சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் 4,5,6,7,8 ஆகியவற்றில் பணிபுரியும் 10,002 தூய்மை பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் சீருடைகள் வழங்கப்படும். ரூ 3.25 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.