தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணி தீவிரம் …400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு…!!

 பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர் .

 

டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து  15 ஆம் தேதி வரையில்  நடைபெறும் இந்நிகழ்ச்சி தூய்மை இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது . இந்நிகழ்ச்சின் முக்கிய நோக்கமானது எவ்விடத்திலும் தூய்மை காணபட வேண்டும் என்பதே ஆகும் . இதைத்தொடர்ந்து  பெசன்ட் நகரில் உள்ள கடற்கரையை சி.ஐ.எஸ்.எப். என்னும்  மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும்  சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் இரண்டும்  சேர்ந்து  தூய்மைபடுத்திவருவதாக கடலோர காவல்படை ஐ.ஜி. பரமேஷ்வர் தெரிவித்துள்ளார் . பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் முக்கிய  பணியை  மத்திய தொழில் பாதுகாப்பு படை, தென்மண்டல டி.ஐ.ஜி. ராஜூ உள்ளிட்ட , 400-க்கும் மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *