“தூத்துக்குடியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி”…. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!!!!

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நிறுவன தலைவர் சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி போட்டியை தொடங்கி வைத்துள்ளார்.

சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, தூத்துக்குடி மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு அலுவலர்  ஜெயரத்னராஜன், தெற்கு மாவட்ட தலைவர் கார்த்திக், அமைப்பு செயலாளர் பார்த்திபன், தேசிய செயலாளர் ராஜ், மாநில துணை அமைப்பு செயலாளர் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *