தூங்கிய ஹவுஸ் மேட்ஸை பாட்டு போட்டு எழுப்பிய பிக்பாஸ்… காமெடியா ஆரம்பிச்சு கடுப்பில் முடிந்த இரண்டாவது புரோமோ…!!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள பால் கேட்ச் டாஸ்க்கை போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர் . நேற்றைய எபிசோடில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்ணில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்களை ஓடவிட்டார் பிக்பாஸ். பிளாஸ்மா டிவியில் வரும் பெயர்கள் உள்ளவர்கள் ஓடிப்போய் பந்துகளை பிடிக்க வேண்டும் . இதில் பாலை பிடிக்க ஓட்டம் பிடித்த பாலா கீழே விழுந்தார்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் தூங்கிக் கொண்டிருந்த போட்டியாளர்களை ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாட்டை போட்டு எழுப்பி விடுகிறார் பிக்பாஸ் . இதன் பின்னர் ஒருவர் பின் ஒருவர் பந்துகளை பிடிக்க ஓட்டம் பிடிக்கின்றனர் . இதையடுத்து இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரின் ஈடுபாடு, பங்களிப்பு தன்மையை மனதில் கொண்டு உங்களை நீங்களே வரிசைப்படுத்திக் கொண்டு அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என போட்டியாளர்களிடம் கூறப்படுகிறது . இது குறித்து முடிவெடுத்து கொண்டிருக்கையில் ரியோ மற்றும் ஆரி இடையில் மோதல் வெடிப்பது போல் புரோமோ நிறைவடைந்தது .