துவைத்த துணிய இப்படி காய வைக்காதீங்க…. ரொம்ப ஆபத்து…. ஆய்வு கூறும் தகவல்..!!

நம்மில் பலரும் வீட்டில் இடம் இல்லாத காரணத்தினால் துவைத்த துணியை வீட்டிலேயே காய வைக்கின்றனர். அது ஆபத்து என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய காலத்தில் வீடுகள் தள்ளி தள்ளி இருக்கும் அதாவது சிறிய இடைவெளிவிட்டு இருக்கும். ஆனால் இப்பொழுது நகர்புறங்களில் வீடுகள் ஒட்டி ஒட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் பலர் வீட்டில் துவைத்த துணியை வீட்டிற்குள்ளேயே காயவைத்து கொள்கின்றனர்.  அந்த காலத்தில் வீட்டை சுற்றி கயிறு கட்டி அங்கு துணியை காய வைத்தனர். இதனால் வெயிலில் துணிகள் காய்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

தற்போது வீட்டில் துணியை காய வைப்பதன் மூலம் கண்ணுக்கு தெரியாமல் பூஞ்சைகள், பாக்டீரியா நுண்ணுயிர்கள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் அதிகம் இருக்கும். இதனால் வீட்டில் காயப்போடும் துணிகளில் அதிகம்.  இது நமது உடம்பிற்கு மிகவும் ஆபத்தானது என்று ஆய்வு கூறுகின்றது. ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் அதிகளவில் இருக்கும்.

நம் வீடுகளில் காயவைக்கும் துணிகளோடு இயல்பாக வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த ஆடையை நாம் அணியும் போது அவர்களுக்கு மூச்சு குழல் வழியாக நுண் கிருமிகள் உள்ளே சென்று ஆஸ்துமாவை உருவாக்கும். இந்த நுண்ணுயிர்களின் வளர்ச்சி வீட்டில் காயப்போடும் துணியில் 30% அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகின்றது. நன்கு வெயிலில் இருக்கும் துணிகள், வெளிப்பகுதியில் காயவைக்கும் துணிகளில் இது இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.