துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… டுவிட்டரில் தெரிவித்த இயக்குனர்…!!!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஹே சினாமிகா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஹே சினாமிகா’. இந்த படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . கடந்த வருடம் மார்ச் 12ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது .

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பின் மீண்டும் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில் ஹே சினாமிகா படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் பிருந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.