துலாம் ராசிக்கு… பணவரவில் தாமதம் ஏற்படும்..முயற்சிகளில் சிறு தொல்லைகள் உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாகவே இருக்கும். பணவரவில் தாமதம் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் சிறு தொல்லைகள் உண்டாகும். எதையும் யாரிடமும் நாசுக்காக சொல்வது ரொம்ப நல்லது. இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பை கொடுக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகளால் உடல்நிலை சோர்வடையும் என்றாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலமான பலனையும் நீங்கள் பெறக்கூடும். இன்று எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வார்கள்.

பழைய கடன் பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். இன்று நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வகையிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே அமையும். முடிந்தால் இன்று  ஆலயம் சென்று வாருங்கள் மிகவும் சிறப்பாகவே இன்று இருக்கும். மாணவச் செல்வங்கள் முயற்சியின் பேரில் தான் கல்வியில் வெற்றி பெறமுடியும். கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். நிதானமாக இருங்கள், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்