துலாம் ராசிக்கு.. உங்களுடைய பேச்சில் உறுதித்தன்மை நிறைந்திருக்கும்.. விட்டுக்கொடுத்து செல்லுங்கள்..!!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய பேச்சில் செயலில் நின்று உறுதித்தன்மை நிறைந்திருக்கும். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள். பணவரவு கிடைக்கும் பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும் எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும். இன்று உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது ரொம்ப நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் திறமைக்கேற்ற உதவிகளும் தாமதப்படும் . பிறர் செய்யும் தவறுகளுக்கும் இன்று நீங்களே பொறுப்பு ஏற்க கூடும் வேலை பளு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள் மாணவர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும் பொறுமையாக கல்வியும் பயில வேண்டும் படித்த பாடத்தை எழுதிப் பார்க்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பாகவே அமையும். அதுபோலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஊதா நிறம்