துலாம் ராசிக்கு… அனுசரித்து செல்லுங்கள்.. சுகமான சூழ்நிலைகள் அமையும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று இனிய சுற்றுலா, நல்ல வாகன யோகம் நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சுகமான சூழ்நிலைகள் அமையும். பொருளாதார பாதிப்புக்கு ஆளாக கூடும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக்குறைவுகளையும் இன்று உண்டாக்கும். அடுத்தவரின் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக அமையலாம். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும்.

மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை இன்று பெறமுடியும். கொஞ்சம் கடினமாக உழையுங்கள் சிறப்பாக காணலாம். இன்று வெளிவட்டாரத்தில் மதிப்பும், புகழும் ஓங்கியிருக்கும். எந்த ஒரு செயலையும் இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள். காதல் வயப்பட கூடிய சூழலும் இன்று அமையும். திருமணப் பேச்சு வார்த்தைகள் இன்று நடத்தினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நடக்கும். அதே போல யாரிடமும் பொறுப்புகளை மட்டும் ஒப்படைக்காமல் இருந்தாலே, இன்றைய நாளில் நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்