தமிழக அமைச்சரவையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நீக்கினால் இன்னும் அதிக விஷயங்களை சொல்லி விடுவார் என்பதால் அவரை நீக்காமல் துறை மாற்றம் செய்துள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசியல் ஊழல் குறித்தும் நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பேசிய ஆடியோ பற்றியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அவர்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இணைந்தது பற்றி பேசிய இபிஎஸ், துரோகியும் துரோகியும் இணைந்துள்ளனர், தினகரனின் கூடாரம் காலி ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்