உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இரவு வேளையில் இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு தும்மல் வந்திருக்கிறது. இதன் காரணமாக நடந்தபடியே தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சரிந்து தெருவில் விழுந்துள்ளார். இதனால் பதறிபோன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பின் அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
जिंदगी न कोई ठिकाना………रास्ते चलते अचानक छींक आई, लड़के ने अपना गला पकड़ा और उसकी मौत हो गई. pic.twitter.com/PVtWXfZxKH
— Shubham shukla (@ShubhamShuklaMP) December 4, 2022
இருப்பினும் அந்த இளைஞர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர் தெரிவித்துள்ளனர். இறந்த நபர் கித்வாய் நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் (18) என தெரியவந்துள்ளது. தும்மல் வந்ததை அடுத்து மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் இருப்பவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..