
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் உத்காலிகா. பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான இவர் விடுதி ஒன்றில் தனது தோழிகள் இருவருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் தோழிகள் இருவரும் ஊருக்கு சென்றிருந்த நிலையில் உத்காலிகா மட்டும் தனியாக அறையில் இருந்துள்ளார். ஊருக்கு சென்ற தோழிகள் இருவரும் இன்று காலை விடுதிக்கு திரும்பிய நிலையில் அறை கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் விடுதிக்காப்பாளர் மற்றும் சக மாணவிகளின் உதவியுடன் அறை கதவை உடைத்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு துப்பட்டாவில் தூக்கு போட்டு உத்காலிகா தற்கொலை செய்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.