துணி துவைத்து கொண்டிருந்த பெண்… மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரக்கையுடன் மின்மோட்டரை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் கங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பின்புறம் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கங்கா ஈரக்கையுடன் மின் மோட்டரை போட முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் கங்கா மீது பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து கங்கா அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மயங்கி கிடந்த அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் கங்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அல்லிநகரம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து கங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *