துணி எடுக்க சென்ற தம்பதியினர்… கணவன் கண் முன்னே நடந்த விபரீதம்… சென்னையில் கோர விபத்து …!!…

இருசக்கர வாகனம்  மீது பேருந்து மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் அப்துல் வாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்சயா பார்த்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் துணிக்கடைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அப்துல் வாஜித்தின் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் நிலை  தடுமாறி கீழே விழுந்த அக்சயா பாத்திமாவி‌ன் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

அதன்பின் படுகாயமடைந்த அப்துல் வாஜித்தை  அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்சயா பாத்திமாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான தட்சணாமூர்த்தி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *