ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதிசங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் துணிவு படத்தில் அஜித் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் பேசி உள்ளதால் சென்சார் குழு 17 இடங்களில் பீப் சவுண்ட் போடும்படி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே டிரைலரில் அஜித் பேசிய அந்த ஒரு வார்த்தையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற காட்சிகள் இருப்பதால், நிச்சயமாக இந்த படத்தில் அஜித் மோசமான கெட்டவனாக வரப்போகிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.