“துடிக்க துடிக்க கழுத்தறுத்து கொலை” 110 அப்பாவி விவசாயிகள் பலி…. பயங்கரவாதிகள் அட்டூழியம்….!!

110 க்கும் மேற்பட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு நைஜீரியாவில் அரசு படையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று அதிகமான நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் வேலை செய்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களை கடத்தி சென்றுள்ளனர்.

மேலும் அவர்களில் 41 பேரின் கை மற்றும் கால்களை கட்டி பயங்கரவாதிகள் அவர்களை  கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். மேலும் விவசாயிகளின் மனைவிகள் 15  பேரையும் கடத்தி சென்றுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் அரசு ஆதரவு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு போகோ ஹராம் அல்லது ஐஎஸ் ஆதரவு குழுக்கள் எவரும் பொறுப்பேற்பதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த கொடூர படுகொலைகளுக்கு நைஜீரிய ஜனாதிபதி முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலை கண்டிப்பாக போகோ ஹராம் பயங்கரவாதிகள் முன்னெடுத்து இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் உறுதியாக கூறியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் வடமேற்கு நைஜீரியாவின் வட மாநிலத்தை சேர்ந்த அப்பாவி விவசாயிகள் என்று கூறப்பட்டுள்ளது. கழுத்தறுத்து கொல்லப்பட்ட 43 விவசாய தொழிலாளர்களின் உடல்கள் ஞாயிறு அன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *