பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி பேரணி சென்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மீதான சுரண்டலை தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் இடைநீக்க நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.