தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 தம்பதிகள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

கஞ்சா கடத்தி வந்த 2 தம்பதிகளை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு   மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 தம்பதிகளை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் குண்டலபட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்-பாண்டிமீனா, செண்பகராஜ்-சித்ராதேவி ஆகியோர்   என்பதும், சட்டவிரோதமாக  கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த   கஞ்சா  மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *