தீவிர ரோந்து பணி…. கோவிலுக்கு பின்புறம் நடந்த சம்பவம்…. ஒட்டு மொத்தமாக தூக்கிய போலீஸ்..!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ராஜா, ராமசாமி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *