தீவிர ரோந்து பணி…. காரில் பதுக்கிய பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காரில் மதுபாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 120 மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வசிக்கும் ராஜதுரை, அவருடன் வந்தவர் இமானுவேல் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ராஜதுரை மற்றும் இமானுவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *