தீவிரபடுத்தப்பட்ட வாகன சோதனை… ஆவணங்கள் இல்லாமல் சிக்கியவை… பறக்கும் படையினர் அதிரடி பறிமுதல்..!!

நாகை மாவட்டம் நாலுகால் மண்டபம் அருகே வாகன சோதனையின் போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட 6 செல்போன்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாலுகால் மண்டபம் அருகே இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 6 செல்போன்கள் ஆவணமில்லாமல் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நாகை ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் சதாசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 6 செல்போன்களை அவரிடமிருந்து பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின் அவற்றை நாகை தாசில்தார் முருகுவிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.