தீராத தலைவலியால் அவதியா?… இதோ பாட்டி வைத்தியம்… நிரந்தர தீர்வு…!!!

தீராத தலைவலிக்கு பாட்டி வைத்தியம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதிலும் குறிப்பாக பாட்டி வைத்தியம் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணம். தீராத தலைவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிலைச் சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசினால் தலைவலி நிமிடத்தில் தீரும். கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும். இதனைப் போலவே புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.