தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு மற்றும் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கங்குவா வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய அப்டேட் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.