ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் சிக்கியதில் சுமார் 250 பயணிகள் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸர் ரோப்காரில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.