கஷ்டப்பட்டு உழைச்சது… எல்லாமே நாசமா போச்சே…. மளமளவென பற்றிய தீயால் பரபரப்பு…!!

ஆத்தூர் பகுதியில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். விவசாயப் பணியை செய்து வரும் மணி தனது விவசாய நிலத்தில் வைக்கோல் போர் அமைத்து வைத்துள்ளார். அப்போது திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் வைக்கோல் போர் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.