தி லெஜன்ட் படத்தின் வெளியிடு உரிமை…. யார் பெற்றுள்ளார் தெரியுமா?….. வெளியான தகவல்…..!!!!

பிரபல நிறுவனங்கள் நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரித்து வருகின்றன. ஆனால் சரவணா ஸ்டோர் தொடர்பான விளம்பரங்களில் லெஜன்ட் சரவணா தானே நடித்து பிரபலமானவர். இவர் தற்போது முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகம் ஆகும் திரைப்படம்”தி லெஜெண்ட்” . இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்த திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தாலும், முயற்சியியாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி “ஒரு லெஜெண்டாக” எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ள படத்தை தமிழக வெளியீடு உரிமையை கோபுரம் சினிமா ஜி.என். அன்புச்செல்வன் பெற்றிருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறியது, “என் கணிப்பின்படி முதல் படத்திலே உச்ச நட்சாத்திரங்கள் வரிசையில் லெஜன்ட் சரவணன் இணைகிறார் என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *