தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மணமக்களுக்கு கட்சி செலவில் திருமணம் செய்து வைக்கப்பட இருக்கிறது.

சீர்வரிசியுடன் கூடிய இலவச திருமணம் வருகிற மார்ச் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட துறைமுகம், தி.ரு.வி.க நகர், கொளத்தூர், எழும்பூர், அம்பத்தூர், வில்லிவாக்கம் போன்ற தொகுதிகளை சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ் பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றுடன் துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 9840115857/ 7299264999 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.