‘தி பேமிலி மேன்-3’ வெப் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதி?… தீயாய் பரவும் தகவல்…!!!

‘தி பேமிலி மேன்-3’ வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பாலிவுட்டில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான தி பேமிலி மேன் வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தி பேமிலி மேன்-2 வெப் தொடர் வெளியானது. இதில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த வெப் தொடரின் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் தி பேமிலி மேன்-3 வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ka Pae Ranasingam teaser: Vijay Sethupathi and Aishwarya Rajesh shine in  this intense drama | Entertainment News,The Indian Express

கடந்த சில மாதங்களுக்கு முன் தி பேமிலி மேன் வெப் தொடரின் இயக்குனர்கள் இயக்க உள்ள புதிய வெப் தொடரில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதில் நடிகர் ஷாஹித் கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகும் இந்த தொடர் தி பேமிலி மேன் தொடரின் மூன்றாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *