தமிழ் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். ராம்சரண், கைரா அதானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து சங்கர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் “தில், தூள் போன்ற மசாலா படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை கேம் சேஞ்சர் படத்தில் வாய்ப்பாக அமைந்தது. அரசியல்வாதிக்கும் அரசு அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படம். பரபரப்பாக நகரும் கதைக்களம் மிகவும் அருமையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.