சாம்சங் கேலக்ஸி மாடல் போன்களில் திரையில் பச்சை நிறக் கோடுகள் தெரிந்தால் திரையை மாற்றி தருவதாக சாம்சங் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோன்களான S20, S20+, S20 Ultra, Note 20, Note 20 Ultra, S21, S21+, S21 Ultra போன்ற மாடல்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் S20 FE, S21 FE, S22, S22+ போன்ற மாடல்கள் இடம்பெறாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.