திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு…. திமுக முன்னிலை…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

காலை 9 மணி நிலவரப்படி 84 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்துள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் தொடந்து முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் சீமான் பின்னடைவில் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *