திருவிழாவுக்கு போனேன் இப்படி பண்ணிட்டானுங்க..! வாலிபர் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை இளையான்குடி அருகே வாலிபரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு காளையார் கோவில் கருமந்தங்குடி கிராமத்தில் வசித்து வரும் அம்மையப்பன் என்பவருடைய மகன் அஜித் வந்துள்ளார். அவருடன் அங்கிருந்த சிலர் தகராறு செய்துள்ளனர்.

அந்த தகராறில் அஜீத்தை அவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் அஜித்திற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.