“திருவிழாவிற்காக போடப்பட்ட பாடல் ” 5 பேரை பாட்டிலால் குத்திய வாலிபர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

போதையில் வாலிபர் ஒருவர் 5 பேரை மது பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(31) என்பவர் அங்கு சென்று ஒலிபெருக்கியில் போடப்பட்ட பாட்டை நிறுத்துமாறு தகராறு செய்துள்ளார். மேலும் ஆனந்த் மது பாட்டிலை உடைத்து அங்கு நின்று கொண்டிருந்த சேகர், சுந்தரமூர்த்தி, ராம்குமார், முத்தையா, கருப்பசாமி ஆகிய 5 பேரையும் குத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *