திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, பெரம்பலூர், நாகை, குமரி, கடலூர், மயிலாடுதுறை,, திருவாரூர்  ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *