திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு…. தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி சர்ப்ரைஸ்….!!!!

திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை காணொளியை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க நடைமுறைக்கு ஏற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. சென்ற ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொளியை பகிர்கிறேன் என தமிழிலேயே பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *