திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..! நெருக்கடியிலிருந்து மீண்ட அமெரிக்கா..!

கடன் உச்சவரம்பை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டதால் அமெரிக்கா நிதி நெருக்கடியில் இருந்து மீண்டது. அமெரிக்காவில் கடன் வாங்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு இந்திய ரூபாய் மதிப்பில் 2574.8 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இந்த உச்ச வரவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே எட்டி விட்டதால் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து விரைவான நடவடிக்கைகள் மூலம் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் கடன் உச்சவரவை உயர்த்த வேண்டும் என்று அந்நாட்டு  நிதியமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கடன் உச்சவரம்பை உயர்த்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஒப்புதல் அளித்துள்ளதால் அமெரிக்கா நெருக்கடியில் இருந்து தப்பியது.